கொழும்பில் கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் கைத்துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று(10.11.2026) கிராண்ட்பாஸ், மஹவத்தை தொடருந்து பாதைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, 9 மி.மீ. ரகத்தைச் சேர்ந்த 10 தோட்டாக்கள் நிரப்பப்பட்ட ஒரு மகசின் மற்றும் 50 கிராம் 300 மில்லிகிராம் எடையுடைய கொக்கெய்ன் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
கொலன்னாவை, சாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.