ஞானசார தேரர் விவகாரம்! முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
பொதுபலாசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் குறித்து மிகச் சர்ச்சைக்குரிய பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மிகவும் ஒரு பெறுமதியான மதிக்கத்தக்க மதமாக பௌத்த மதம் திகழ்கின்றது.ஆனால் முறைகேடாக செயற்படுகின்ற சில தரப்பினரால் மதத்தின் புனிதம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பௌத்த மதம் இலங்கையிலே எவ்வாறு இயங்கப்போகின்றது என்பது தொடர்பில் மல்வத்தை, அஸ்கிரிய, காமினி நிக்காய ஆகிய முன்று பீடங்களும் தீர்மானிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.
அத்தோடு, மக்களை யாரை பௌத்த துறவிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும் முன்று பீடங்களும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பௌத்ததுறவிகள் என்பவர்கள் யார் என்பது தொடர்பிலும் தெளிவான விளக்கம் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நாட்டு நடப்பு நிகழ்ச்சியில் காணலாம்.