கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி
கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (08.01.2023) கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 29 வயதுடைய ஜேகதீஸ்வரன் பவித்திரன் என்ற வவுனியா பூந்தொட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசரணை
உயிரிழந்த இளைஞனின் சடலம் கிளிநொச்சி நிதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் விசரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல் - எரிமலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 10 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
