சிம்பாப்வேக்கு எதிராக முதலாவது வெற்றியை பதிவு செய்த இலங்கை
புதிய இணைப்பு
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 209 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் 211 ஓட்டங்கள் பெற்று இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றி இலக்கை 49 ஓவர்களில் இலங்கை அணி எட்டியுள்ளது.
மேலும் இந்த போட்டியில் ஜனித் லியனகே சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 127 பந்துகளில் 95 ஓட்டங்கள் குவித்திருந்ததோடு ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணிக்கு 209 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 44.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இலங்கை அணி சார்பில் மஹீஷ் தீக்ஷன 4 விக்கெட்டுக்களையும்இ துஷ்மந்த சமீர மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தி உள்ளனர்.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழையால் தடைப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி ஆரம்பமாக்கியுள்ளது.
இப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (08.01.2023) நடைபெற்று வருகிறது.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் சிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
மழை பெய்யும் வாய்ப்பு
இந்நிலையில் மாலை நேரத்தில் மழை பெய்யும் வாய்ப்புக்கு மத்தியிலேயே இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சுகவீனம் காரணமாக இந்த ஒருநாள் தொடரில் இருந்து விலகிய நிலையில் இடைவெளிக்குப் பின்னர் அணிக்குத் திரும்பிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ முதல் போட்டியில் டக் அவுட் ஆகி இருந்தார்.
தனது கன்னி ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ஜனித் லயனகேவும் சோபிக்கத் தவறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |