இளம் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞன் எடுத்த விபரீத முடிவு
சிலாபத்தில் இளம் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட, இளைஞர் ஒருவர் உடலில் தீயிட்டு உயிரை மாய்த்துள்தளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் சிலாபம், கொக்கவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் வலப்பனை, அட்டகெல்லந்த பகுதியை சேர்ந்த 29 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபரீத முடிவு
நேற்று முன்தினம் பிற்பகல் சிலாபம், கொக்காவில சந்தியில் குறித்த இளைஞன் தன்மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து, சிகிச்சைக்காக சிலாபம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்ணுடன் வாக்குவாதம்
உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர் அன்றையதினம் இளம் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞர் சிலாபத்திற்கு எந்த காரணத்திற்காக வந்தார் என்பது இதுவரை வெளியிடப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
