உலகிலேயே அதிக எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொள்ளும் கும்பமேளா விழா ஆரம்பம்
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை ஈர்க்கும் கும்பமேளா (Kumbh Mela) இந்து மத விழா இன்று (13) தொடங்குகிறது.
கும்பமேளா விழாவானது இந்தியாவின் பிரயாக்ராஜில் (Prayagraj) நடைபெறுகிறது
400 மில்லியனுக்கும் அதிகமான இந்து பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த விழா, விண்வெளியில் இருந்து கூட தெரியும் என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
400 மில்லியனுக்கும் அதிகமான இந்து பக்தர்கள்
கும்பமேளாவின் தோற்றம் இந்துக்களின் ஒரு புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, தேவர்களும் அசுரர்களும் இறவாமைக்கு உறுதியளிக்கும் அமிர்தத்தைப் பெற சண்டையிட்ட போது, பிரயாக்ராஜ், ஹரித்வார், உஜ்ஜைனி மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் அமிர்தத்தின் சில துளிகள் சிதறி விழுந்தன.
எனவே, இந்த நான்கு நகரங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா இந்து மத விழா இந்த ஆண்டு 45 நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
🚨 More than 1 crore (10 million) people visited on day 1 of Maha Kumbh Mela 2025. pic.twitter.com/JdPpDBT1D5
— Indian Tech & Infra (@IndianTechGuide) January 13, 2025
இந்த ஆண்டும், 400 மில்லியனுக்கும் அதிகமான இந்து பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தினத்தில், ஐந்து முதல் எட்டு மில்லியன் பக்தர்கள் புனித நதிகளில் நீராடுவார்கள் என்றும் அதற்கு அடுத்த நாள், நீராடுபவர்களின் எண்ணிக்கை 20 மில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நிகழ்வைப் பாதுகாக்கவும், வருகை தரும் பக்தர்கள் உள்ளிட்ட கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் 40,000 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 100,000 பாதுகாப்புப் பணியாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |