கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொதிகளுடன் சிக்கிய இளைஞர்
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை (29) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினரால், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சந்தேகநபரின் பயண பொதியிலிருந்து 30,000 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.