இந்தியாவுக்கும் பங்களாதேஸுக்கும் இடையில் தீவிரமடையும் முறுகல்
இந்தியாவுக்கும் பங்களாதேஸுக்கும் இடையில் ராஜதந்திர முறுகல் தீவிரமடைந்து வருகிறது.
முன்னாள் பிரதமர் சேக் ஹசீனா நாட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ஆட்சிக்கு வந்த பங்களாதேஸின் இடைக்கால அரசாங்கம், இந்தியாவுடன் முரண்பட்ட கொள்கையை கடைப்பிடிக்கும் நிலையிலேயே இந்த தீவிர ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில், அண்மையில், இந்திய- பங்களாதேஸ் எல்லையில் இந்திய படையினர் வேலி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டபோது, அதனை பங்களாதேஸின் படையினர் ஆட்சேபித்தனர்.
மோதல் நிலை
இதன் காரணமாக,இரண்டு தரப்புக்கும் இடையில் மோதல் நிலை உருவாகிய நிலையில், இந்திய தரப்பின் கிராமமக்கள் அதிகளவில் ஒன்று கூடியதை அடுத்து பங்களாதேஸ் படையினர் அங்கிருந்து அகன்று சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பங்களாதேஸ_க்கான இந்திய உயர்ஸ்தானிகரை நேரில் அழைத்த பங்களாதேஸ், இராஜதந்திர எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
எனினும் பங்களாதேஸின் இந்த இராஜதந்திர எதிர்ப்புக்கு இந்திய தரப்பின் பதில் இன்னும் வழங்கப்படவில்லை.
இதேவேளை பங்களதேஸின் இந்த இந்திய எதிர்ப்பு போக்குக்கு பாகிஸ்தானே முக்கிய காரணம் என்று இந்திய தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
இதற்கிடையில் 44 ஆண்டுகளுக்கு பின்னர் பங்களாதேஸ் படையினருக்கு பாகிஸ்தான் இராணுவப்பயிற்சிகளை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |