மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய 25 ஆயிரம் ரூபாவிற்கான காசோலை செல்லுபடியற்றதாம்..
டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாவுக்கான காசோலைகளில் பெரும்பாலானவை செல்லுபடியற்றவை என்று தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் நேற்று(28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முறையாக கிடைக்காத நிவாரணம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கையை நிலைகுலையச் செய்த டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதாக கூறப்பட்ட நிவாரணங்கள் முறையாக வழங்கப்படவில்லை. 25,000 ரூபாவுக்காக வழங்கப்பட்ட காசோலைகளில் பெரும்பாலானவை செல்லுபடியற்றவையாகவுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் அசௌகரியத்துக்கும் நெருக்கடிக்கும் உள்ளாக்கும் வகையிலேயே இந்த அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
சேதமடைந்த வீதிகள், புகையிரத வீதிகளில் பெரும்பாலானவை இன்னும் முழுமையாக புனரமைக்கப்படவில்லை. எந்தவொரு விடயம் குறித்த அறிவின்மையே இவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு பிரதான காரணியாகும் என குறிப்பிட்டுள்ளார்.