ஈரானின் புதிய அதியுச்ச தலைவர் உயிருடன் உள்ளரா..! போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அவரின் முடிவு
ஈரானின் புதிய அதியுச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நலமுடன் இருக்கிறார் என்றும் “நிலையைக் முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்” என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் Abbas Araghchi தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு அளித்த நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அதியுச்சதலைவர்
மேலும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த முயற்சியும் இதுவரை அவரிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அதியுச்சதலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி தாக்குதலில் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரின் மகனான மொஜ்தபா கமேனி அதியுச்சதலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து அவர் பொது வெளியில் தோன்றவில்லை.மேலும் அவரின் முதல் அறிக்கையை கடந்த 12 ஆம் திகதி ஈரானின் அரச ஊடகங்கள் வெளியிட்டன.
செங்கடலை இலக்கு வைக்கும் ஹவுதிகள்! ஹோர்முஸை தொடர்ந்து மூடப்படும் மற்றுமொரு நீரிணை - கேள்விகுறியாகும் உலக வர்த்தகம்
மொஜ்தபா கமேனி
போரை நியாயமான முறையில் முடிவுக்கு கொண்டுவரும் எந்தவொரு “பிராந்திய முயற்சியையும்” ஈரான் வரவேற்கிறது என்றும், Strait of Hormuz “அமெரிக்க கப்பல்கள் மற்றும் அமெரிக்காவின் கூட்டாளிகளின் கப்பல்கள் தவிர மற்ற அனைவருக்கும் திறந்துள்ளது என்றும் குறிப்பிட்டடிருந்தார்.

அதனால் அவர் உயிருடன் உள்ளாரா இல்லையா என்ற கேள்விகள் அதிகரித்து வரும் நிலையில் மொஜ்தபா கமேனி நலமுடன் இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.