இளம் பெண் வைத்தியர் கொலை விவகாரம் - சந்தேகநபர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் நால்வரின் விளக்கமறியல் உத்தரவு எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் குற்றத்திற்கு துணை புரிந்ததாக கூறப்படும் மேலும் இருவர் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
குறித்த நால்வரும் இன்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாரம்மல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஜயசுந்தர முதியன்சேலாகே சம்பிக ஸ்ரீயான் ஜயசுந்தர, அவரது மனைவியான 35 வயதுடைய ரத்நாயக்க முதியன்சேலாகே நெத்மி அமாயா ரத்நாயக்க, கொலைச் சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் 49 வயதுடைய சாரதி ஜயசிங்க ஆராச்சிகே ரஜித சாலிய சமரசிங்க மற்றும் குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொலிஸ் பரிசோதகர் அனில் ஆரியவங்ச ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இக்கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
சி.டி.விக்ரமரத்னவின் இறுதி நிமிடங்களில் இடப்பட்ட உத்தரவு.. ஒரு சில நிமிடங்களில் பிரிந்த உயிர்! உணர்ச்சிவசப்பட்ட 16 வருட கால விசுவாசி
ரிஷாட் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி தொடர்பில் பரபரப்பு வாக்குமூலம் - பல தகவல்கள் அம்பலம்
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 9 நிமிடங்கள் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam