கஞ்சிபாணி இம்ரானைத் தேடி விசேட பொலிஸ் குழு இந்தோனேசிய பயணம்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவராகக் கருதப்படும் கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்வதற்காக, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) ரொகான் ஒலுகல உள்ளிட்ட ஒரு குழு இந்தோனேசியாவிற்குப் புறப்பட்டுள்ளது.
கஞ்சிபானி இம்ரான் மலேசியாவில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரைக் கைது செய்வதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொகான் ஒலுகல உள்ளிட்ட ஒரு குழு மலேசியாவிற்குச் சென்றதாகவும் ஆனால் கஞ்சிபானி இம்ரான் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.டி.விக்ரமரத்னவின் இறுதி நிமிடங்களில் இடப்பட்ட உத்தரவு.. ஒரு சில நிமிடங்களில் பிரிந்த உயிர்! உணர்ச்சிவசப்பட்ட 16 வருட கால விசுவாசி
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்
இதற்கிடையில், கஞ்சிபானி இம்ரானின் முக்கிய அடியாட்களில் ஒருவராகக் கருதப்படும் 'ரத்மலானே சைமா' என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் உட்பட மூன்று பேரை மலேசியாவில் கைது செய்வதிலும் பொலிஸார் வெற்றி கண்டுள்ளனர்.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, கஞ்சிபானி இம்ரான் இந்தோனேசியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவரைக் கைது செய்வதற்காக, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொகான் ஒலுகல உள்ளிட்ட ஒரு குழு இந்தோனேசியாவுக்குப் புறப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு, இது தொடர்பான அனைத்துத் தகவல்களையும், மலேசியாவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்த விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு அறிக்கையை அடுத்த சில நாட்களில் வெளியிட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam