புதிய 2000 ரூபாய் நாணயத்தாளில் உள்ள பல இரகசியங்கள்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபா நாணயத்தாளில் பல இரகசிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தில் நேற்றையதினம்(28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புதிய நாணயத்தாள் புழக்கத்தில்
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆண்டுகால நிறைவை முன்னிட்டு 2000 ரூபா நாணயத் தாள் புழக்கத்தில் விடப்பட்டது.
இந்த 2000 ரூபாவுக்கு ஒப்பானதாக போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் காணப்படுவதாக ஒருசில செய்திகள் வெளியாகியுள்ளதையும் மக்கள் மத்தியில் அச்சநிலை காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

நாணய விநியோகத்துக்கு புதிதாக ஒரு நாணயத்தாளை அறிமுகப்படுத்தும் போது இவ்வாறான சிக்கல்கள் தோற்றம் பெறுவது வழமையானதே.
2000 ரூபா நாணயத் தாளில் பல இரகசிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2000 ரூபா போலி நாணய புழக்கம் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.