பாதாள உலக குழுவினருக்கு தலைவலியாக உள்ள துணிச்சலான பொலிஸ் அதிகாரி : நடுக்கத்தில் அரசியல்வாதிகள்
வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல நியமிக்கப்பட்டுள்ளார்.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல, சர்வதேச ரீதியாக தேடப்பட்டு வந்த பல முக்கிய குற்றவாளிகளை இலங்கைக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்களிப்பை வழங்கியவராகும்.
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலை இலங்கைக்கு கொண்டு வருவதில் அவர் முக்கிய நபராக செயற்பட்டுள்ளார்.
சஞ்சீவ படுகொலை
கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட குழுவினரை நாட்டுக்கு கொண்டு வரும் பணியை மேற்கொண்டுள்ளார்.

குற்றக் கும்பல்களைக் கட்டுப்படுத்துவதிலும், சர்வதேச ரீதியிலான குற்றப் புலனாய்வு நடவடிக்கைகளிலும் அனுபவம் வாய்ந்த ஒரு அதிகாரியாக அவர் கருதப்படுகிறார்.
அதற்கமைய, வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் நடவடிக்கைகளை அவர் இன்று முதல் வழிநடத்தவுள்ளார். அவர் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில் பாதாள உலகக் குழுவினருக்கு சிம்மசொப்பானமாக திகழந்த ரோஹன் ஓலுகல, ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.