யாழில் நல்லூர் பகுதியில் பெண்ணொருவர் கைது
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் உள்ள காணியொன்றை மோசடியாக உரிம மாற்றம் செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, யாழை சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நல்லூர் பகுதியில் மூவருக்குச் சொந்தமான காணியை ஒருவர் மரணித்து விட்ட நிலையில் மற்றைய நபர் வெளிநாட்டில் வசித்து வந்திருப்பதுடன் அவருக்குத் தெரியாமல் மூன்றாவது நபர் தனது பெயருக்குக்கு உரிம மாற்றம் செய்துள்ளார்.
பெண் கைது
இதை அறிந்து கொண்ட நபர் , தனக்குத் தெரியாமல் தனது காணியை உரிம மாற்றம் செய்து மற்றைய நபர் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மோசடியான முறையில் காணி உரிம மாற்றம் செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam