மதத்தின் பெயரால் மனிதம் இறந்து விடக்கூடாது: மன்னார் இந்து மத பீட தலைவர்
வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று சைவ சமய மக்களின் வழிபாட்டு உரிமைகள் புனித தன்மைகள் மீறப்பட்டமையினை வன்மையாக கண்டித்துள்ளதோடு, மதத்தின் பெயரால் மனிதம் இறந்து விடக் கூடாது என மன்னார் இந்து மத பீடத்தின் தலைவர் சிவஸ்ரீ மகா தர்மகுமாரக் குருக்கள் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆலயத்தில் சைவ சமய மக்களின் வழிபாட்டு உரிமைகள் புனித தன்மைகள் மீறப்பட்டமை தொடர்பில் இன்று (10) தர்மகுமாரக் குருக்கள் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீரழிக்கும் செயல்கள்
குறித்த அறிக்கையில் மேலும், “வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் கோவில் மகா சிவராத்திரி பூசையின் போது மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் ஒட்டு மொத்த இந்து சமூகத்தையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கி இருக்கின்றது.

சைவர்களின் வழிபாட்டு உரிமை மிகப் புனிதமான விரத நாளில் அப்பட்டமாக மறுக்கப்பட்டு மிக மோசமாக சைவ சமய விழுமியங்களை புனித சடங்குகளை அவமதிக்கும் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.
சைவ சமயத்தின் புனிததன்மையினை சீரழிக்கும் இந்த செயல்கள் மிகப் பாரதூரமானவை.
மத நல்லிணக்கம்
இது அடிப்படை வழிபாட்டு உரிமை மீறும் செயற்பாடு என்பதை சைவ உலகிற்கும் சொல்ல வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும்.
உலகம் பூராகவும் உள்ள சைவர்களின் மிக உன்னதமான முதன்மையான விரதம் மகா சிவராத்திரி ஆகும். யுத்தம் முடிந்து சர்வமதங்களும் இப்போது தான் புரிந்துனர்வுடன் ஒன்றாக இணைந்து பயனிக்கும் வேளையில் மீண்டும் ஒரு பிளவினை உருவாக்கியிருக்கும்.

மேலும், மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகவே நாம் பார்க்கின்றோம். அந்தவகையில், இந்த சிவராத்திரி தினத்தில் தொன்று தொட்டு தமிழ்ச் சைவர்கள் வழிபட்டு வரும் ஆதி சிவன் கோவிலில் தடைபெற்ற மோசமான சம்பங்களை அராஜகங்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri