பாதுகாப்பு அளிக்கப்பட்டால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: சாகிப் அல் ஹசன் அறிவிப்பு
தனது உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டால், பங்களாதேஷிற்கு திரும்பி நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிரிக்கெட் வீரருமான சாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
2024 ஆகஸ்டில் நடைபெற்ற மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர், அவருக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வழக்கு நிலுவை
ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சாகிப் அல் ஹசன், அதன்பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாகக் கடந்த இரண்டு வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகின்றார்.
அவர் மீது கொலை வழக்கும், ஊழல் தடுப்புப் பிரிவினரின் வழக்கும் நிலுவையில் உள்ளன. இது குறித்து இலங்கையில் வைத்து சர்வதேச செய்திச் சேவையொன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள சாகிப், "நான் எந்தத் தவறும் செய்யவில்லை.

அரசாங்கம் எனது பாதுகாப்பை உறுதி செய்தால், நான் நாடு திரும்பி நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளத் தயார்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் தற்போதைய பிரதமர் தாரிக் ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக தாய்நாட்டில் தனது விடைபெறும் போட்டியில் விளையாடவும், 2027 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவும் விருப்பம் கொண்டுள்ளதாகவும் சாகிப் அல் ஹசன் குறிப்பிட்டுள்ளார்.
பொரளை சிறைச்சாலைக்குள் பதற்றத்தை ஏற்படுத்திய கும்பல் யார்...! குற்றப் பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள்