முல்லைத்தீவில் சுட்டு கொலை செய்யப்பட்ட பெண்! மூவர் கைது
முல்லைத்தீவு - வெலிஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹடுகஸ்வெவ பிரதேசத்தில் பெண் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் நேற்றையதினம் (06.12.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலை சம்பவம் ஹடுகஸ்வெவ பிரதேசத்தின் கெப்பற்றிகொல்லாவ எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் T 56 துப்பாக்கி அதன் 08 தோட்டாக்கள், ஒரு ரிவால்வர் துப்பாக்கி அதன் 05 தோட்டாக்கள், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, 41, 39 மற்றும் 33 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
விபத்து ஏற்பட்டு பரிதாப நிலைமையில் இருக்கும் தமிழ், அடுத்து என்ன... சின்ன மருமகள் சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam