யாழில் பெண்களை அச்சுறுத்தும் விதமாக செயற்பட்ட இருவர்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வீதியால் சென்ற பெண்களை அச்சுறுத்தும் விதமாக ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கூரிய ஆயுதங்களை வைத்திருந்தமை தொடர்பான இருவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பதில் நீதவான் நீதிமன்ற நீதவான் பி.சுப்பிரமணியம் நேற்று வெள்ளிக்கிழமை (06.12.2024) குறித்த உத்தரவை வழங்கியுள்ளார்.
பருத்தித்துறை கோரியடிப் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(05.12.2024) மாலை வீதியால் சென்ற பெண்கள் யுவதிகளை அச்சுறுத்தும் விதமான செயல்களில் கோஷ்டி ஒன்று ஈடுபட்டிருந்தது.
தப்பியோடிய சிலர்
இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, அங்கு சென்ற பொலிஸார் குறித்த குழுவை சுற்றி வளைத்து கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.
இதில் சிலர் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |