குடும்பத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தவர் கைது
சட்டவிரோதமான முறையில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான இ-சிகரெட் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் சுங்க அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நிட்டம்புவ, திஹாரிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
பயணப் பொதி
அவர் நேற்று பிற்பகல் டுபாயிலிருந்து Fly Dubai Airlines இன் FZ-549 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருடன் அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் வந்ததாக தகவல் வெளியானது.
அவர்கள் கொண்டு வந்த 08 பயணப் பொதிகளில் சிறிய பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 740 இலத்திரனியல் சிகரெட்டுகள் மற்றும் 780 வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தனக்கு கிடைத்த உத்தரவின் அடிப்படையில் குறித்த சிகரெட் கையிருப்பை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சுங்க அதிகாரிகள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
