கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான இராணுவ சிப்பாய்
நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (07) முன்னனெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் (Anuradhapura), பொத்தானேகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஆவார்.
நீதவான் நீதிமன்றில் முன்னிலை
குறித்த சந்தேக நபர் துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 12.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து 20 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 100 சிகரெட் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
