பைடனுக்கு பதிலாக களமிறங்கும் கமலா ஹாரிஸூக்கு குவியும் பணம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) ,ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris), புதிய ஜனாதிபதி வேட்பாளராக தெரிவாகியுள்ளார்.
அவருக்கு எதிராக போட்டியிட்ட கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கு போதிய நிதி கிடைக்காத நிலையில், கமலா ஹாரிஸ், ஜனாதிபதி வேட்பாளராவது உறுதியாகியுள்ளது.
கிடைத்துள்ள நன்கொடை
இதனை கட்சியின் உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர் முக்கியமாக கமலா ஹாரிஸூக்கு அதிக அளவில் நிதி கிடைத்துள்ளது.
தேர்தல் நிதி திரட்டும் பணியைத் கமலா ஹாரிஸ் ஆரம்பித்த நிலையில், முதல் 24 மணி நேரத்தில் மட்டும் அந்தக்கட்சிக்கு 677.6 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனநாயக கட்சியின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் வேட்பாளர் நிலையில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிக்கை வெளியிட்டார்.
வயது மூப்பு என்ற அடிப்படையில் அண்மையில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புனான விவாதத்தின் போதே, தன்னிலை மறந்து செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து வேட்பாளர் நிலையில் இருந்து விலகிய ஜோ பைடன், கமலா ஹரிஸை ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைத்தார்.
இதற்கிடையில் கருத்துக்கணிப்புக்களின்படி, ட்ரம்ப் வெற்றிபெற 65 வீத வாய்ப்புக்களும், கமலா ஹாரிஸ் 40 வீத வெற்றி வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |