விசேட புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகளால் பெண்ணொருவர் கைது
கத்தாரில் முறையான உரிமம் இன்றி வேலை வாங்கித்தருவதாகக் கூறி பெருந்தொகை பணத்தை ஏமாற்றிய பெண்ணொருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஜாஎல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கட்டாரில் வேலை வங்கி தருவதாக 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு மூன்று பேரை வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு
இதன்போது உறுதியளித்தபடி வேலை கிடைக்காததால், அவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ வெளிநாட்டு வேலையைப் பெறுவதற்கு பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன், அந்த நிறுவனத்தில் வெளிநாட்டு வேலைகளுக்கு பணியமர்த்துவதற்கான சரியான உரிமம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை பெறுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
