விம்பிள்டன் கோப்பையை வென்ற செக்குடியரசு வீராங்கனை
லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், செக் குடியரசை சேர்ந்த லிண்டா நோஸ்கோவா வெற்றி பெற்று தனது முதலாவது கிரேண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது.
விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று(11) நடந்த சாம்பியனுக்கான இறுதி ஆட்டத்தில் தர வரிசையில் 9ஆவது இடத்தில் இருக்கும் செக்குடியரசு வீராங்கனை கரோலினா முச்சோவா (21), சக நாட்டவரும் 12ஆம் நிலை வீராங்கனையுமான லிண்டா நோஸ் கோவாவுடன் (21) மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், சக நாட்டு வீராங்கனையான கரோலினா முச்சோவாவை 6-2, 5-7, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நோஸ்கோவா வீழ்த்தினார்.

போட்டியின் தொடக்கத்தில் அபாரமாக செயற்பட்ட நோஸ்கோவா, இரண்டாவது செட்டில் 5-2 என முன்னிலை பெற்றிருந்தபோது பல வெற்றி வாய்ப்புகளைத் தவறவிட்டார்.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட முச்சோவா, இரண்டாவது செட்டைக் கைப்பற்றிப் போட்டியை விறுவிறுப்பாக்கினார்.
இருப்பினும், மூன்றாம் செட்டில் தனது பதற்றத்தைக் கட்டுப்படுத்திய 21 வயதான நோஸ்கோவா, மீண்டும் ஆதிக்கத்தைச் செலுத்தி வெற்றியைத் தனதாக்கிக்கொண்டார்.
செக் வீராங்கனை
இதன்படி விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வெல்லும் மூன்றாவது செக் வீராங்கனை என்ற பெருமையை நோஸ்கோவா பெற்றுள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற லிண்டா நோஸ்கோவாவுக்கு ரூ.46 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
2ஆவது இடம் பெற்ற கரோலினா முச்சோவாவுக்கு ரூ.23 கோடி கிடைத்தது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஜானிக் சினெர் (இத்தாலி), பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவருமான அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் (ஜெர்மனி) பலப்பரீட்சை நடத்துகிறார்.
இருவரும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றனர்.இதில் 10 ஆட்டங்களில் ஜானிக் சின்னெரும், 4 ஆட்டங்களில் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் வென்றுள்ளனர்.
கடைசி 9 ஆட்டங்களில் சினெர் தொடர்ச்சியாக வெற்றிப்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! Manithan