2024 இல் இஸ்ரேல் பழி வாங்குமா அல்லது பழி வாங்கப்படுமா?
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் மிது ஹமாஸ் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் இஸ்ரேலின் மொசாட் தேடித் தேடிக் கொலை செய்யவேண்டும் என்ற உத்தரவுடன் தான் 2024 ஆம் ஆண்டு பிறந்தது.
இந்தப் புதிய வருடம் என்பது, ஹமாஸ் மிதான தனது வேட்டையை இஸ்ரேல் வேறு நாடுகளுக்கும் விஸ்தரிக்கப் போகின்றது என்பதை, இந்த வருடத்தின் ஆரம்பத்தில் லெபனானில் ஆரம்பமாகிய படுகொலையும், மொசாட் தலைவன் மேற்கொண்ட ஒரு முக்கிய அறைகூவலும் வெளிப்படுத்தி நிற்கின்றது.
அதேபோன்று, லெபனானில் வைத்து ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லாவின் தலைவர் Hassan Nasrallah, இஸ்ரேல் மீது தாம் மோசமான பழிவாங்கல்களை மேற்கொள்ள இருப்பதாக சத்தியம் செய்துள்ளார்.
இதேபோன்று, 2024ம் ஆண்டு என்பது பழி வாங்கல்களின் ஆண்டாக இருக்கப் போகின்றது என்பதை வெளிப்படுத்தக்கூடிய பல அறைகூவல்கள், எச்சரிக்கைகள் பல்வேறு தரப்புக்களிடம் இருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இந்த விடயம் பற்றி தனது பார்வையைச் செலுத்துகின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |