மட்டக்களப்பில் வீதியில் நிற்கும் யானைகளால் அச்சத்தில் வாழும் கிராம மக்கள்
மட்டக்களப்பு (Batticaloa) - ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேப்பவெட்டுவான் கிராமத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக பெரும் அவதியுறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியின் வீதியில் நிற்கும் யானைகளால் பாடசாலை செல்லும் மாணவர்கள் உட்பட தோட்டத்திற்கு வேலை செய்யச் செல்லும் விவசாயிகள் என அனைவரும் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளின் தாக்குதல் காரணமாக இந்த வருடம் மாத்திரம் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்நிலையில், தினம் தினம் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக அச்சத்துடன் வாழவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
எனவே, இது குறித்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் கவனம் செலுத்தி தங்களது உயிர்களை பாதுகாத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
