நீண்டகாலமாக நடந்த கொலை வழக்கு! 11 வருடங்களுக்கு பின்னர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
பிட்டிகல, மிரிஸ்வத்த பகுதியில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு பலபிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கண்டி பகுதியைச் சேர்ந்த விந்துவ ராஜ் சந்திர மோகன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை
2015ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி, மிரிஸ்வத்த பகுதியில் மாணிக்கம் மோகன் என்பவரைத் தடியால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தி கொலை செய்ததாக பிரதிவாதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

வடக்கு பிட்டிகல பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் கிருஷ்ணகுமார் என்பவர் பிட்டிகல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த வழக்கு CRI 2264/2019 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் பலபிட்டிய மேல் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் தீர்ப்பு நேற்று (10) அறிவிக்கப்பட்டது.
இதன்போது, தண்டனைச் சட்டக்கோவையின் 32ஆம் பிரிவுடன் வாசிக்கப்படும் 296ஆம் பிரிவின் கீழ் பிரதிவாதி கொலைக் குற்றத்திற்கு குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan