போரை காட்டி கோட்டாபய ராஜபக்ச செய்த மிக் டீல்! உண்மைகளை அம்பலப்படுத்தியவர்கள் மரணம்..
மிக்-27 போர் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொள்முதல் நடவடிக்கையின் போது, கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகவும், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் பதவி வகித்திருந்தனர்.
இந்த கொள்முதல் நடவடிக்கையால் அரசுக்கு சுமார் 14 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் பங்கு குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொள்முதல் நடவடிக்கையில் முறைகேடான கொடுப்பனவுகள் மற்றும் கமிஷன் தொடர்பான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மிக்-27 கொள்முதல் தொடர்பான தகவல்களை வெளிக்கொண்டு வந்திருந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க , பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் இந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்தி பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
மிக்-27 கொள்முதல் விவகாரம் தொடர்பாக முன்னாள் விமானப்படை தளபதிகள் மற்றும் அதிகாரிகளிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் ஆட்சியாளர்கள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்த விசாரணைகளும் தற்போது தீவிரமடைந்துள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி...
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan