ரொட்டவெவயில் காட்டு யானைகள் தொல்லை - கிராமவாசிகள் விசனம்
திருகோணமலை - ரொட்டவெவ கிராமத்தில் கோவிட்டின் அச்சம் ஒரு பக்கம் இருக்கையில் காட்டு யானைகளின் தொல்லை மறுபக்கம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் வீட்டுத் தோட்டத்தையாவது அழகாக வைக்கும் நோக்குடன் தென்னை, பலா, மா மற்றும் மரவள்ளி, வெண்டி போன்றவற்றை வீட்டுதோட்டத்தில் நாட்டி தூரத்திலிருந்து குடத்தினால் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றி வளர்த்த நிலையில், ஒரே நாளில் வந்து காட்டு யானை அனைத்து மரங்களையும் சேதமாக்கி விட்டுச் சென்று உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
யானை மின் வேலி அமைப்பதற்கு அரசாங்கத்தினால் கிராமத்தைச் சுற்றி அளவீடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், இன்னும் வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் மிக விரைவில் யானை மின் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இருந்த போதிலும் மிக விரைவாக யானை மின் வேலி அமைக்காவிட்டால் ரொட்டவெவ, மிறிஸ்வெவ கிராமத்திலுள்ள மக்கள் வீடுகளில் நாட்டில் இருக்கின்ற அனைத்து பயிர்களையும் அளிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆகவே மிக விரைவில் யானை மின் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam