தொடர்ந்து மோசமடையும் சுரேஷ் சலேயின் உடல்நிலை..! குடும்பத்தினர் வெளியிட்டுள்ள தகவல்
சுரேஷ் சலேயின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை அவரது குடும்ப உறுப்பினர்கள் இன்று (12.06.2026) முற்பகல் சந்தித்து அவரது நலன் தொடர்பில் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை கூறியுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் அவரது உயிருக்கு கணிசமான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்
இதேவேளை, சுரேஷ் சலே தொடர்பாக அஸ்கிரி விஹாரையின் மகாநாயக்க தேரர், கலாநிதி வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரரும் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சுரேஷ் சலேயின் மனைவி அஸ்கிரி விஹாரைக்கு வருகை தந்து, தனது கணவர் சார்பாகக் கோரிக்கை விடுத்ததாக அந்த கடிதத்தில் மகாநாயக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன் கணவருக்கு ஏதேனும் நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும், அந்த வேண்டுகோளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சலேயின் மனைவி கேட்டுக்கொண்டதாகவும் அஸ்கிரி மகாநாயக்க தேரர் ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளார்.