சொல்லிசை பாடகர் சங்கீத்சன் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!
புதிய இணைப்பு
சொல்லிசை கலைஞர் சங்கீத்சனை சற்றுமுன்னர் பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
முதலாம் இணைப்பு
தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீத்சன் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதுடன், பயங்கரவாதம் தடைச்சட்டம் வழக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்து வழக்கு இன்று(12.06.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்ட நிலையில், சாதாரண வழக்காக மாற்றப்பட்டுள்ளதுடன், சங்கீத்சனுக்கு பிணை வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், நீதிமன்றம் வளாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கிளிநொச்சியை பகுதியை பிறப்பிடமாக கொண்ட சங்கீத்சன், தனது சமூக வலைத்தளங்களில் தாயக எழுச்சி பாடலை எடிட் செய்து பதிவிட்ட குற்றத்திற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரை கைது செய்த நாள் முதல் தமிழ் தலைவர்கள் பலர் சங்கீத்சன்னை வெளியில் கொண்டு வருவதற்கான வேலைப்பாடுகளை செய்து வந்தனர். அதே சமயம் தமிழர் பகுதிகளில் பல இடங்களில் சங்கீத்சன் விடுதலைக்காக போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இருப்பினும், இன்று(12.06.2026) குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் 17ஆம் திகதி வரை அவருடைய விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதுடன், அவர் மீதான பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO








