இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு

Sri Lankan Tamils Mullivaikal Remembrance Day Sri Lankan Peoples Rajapaksa Family Sri Lanka Government
By T.thibaharan Jun 11, 2026 09:07 AM GMT
Report

இலங்கை தீவின் தமிழின படுகொலையை தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது சிங்கள பௌத்த மகாசங்கம் என்ற நிலை மாறி இப்போது சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளும் சிங்கள பௌத்த இனவாத சகதிக்குள் மூழ்கி விட்டார்களா அல்லது சிங்கள பௌத்தத்தின் இனப்படுகொலை தத்துவத்தை இவர்களும் ஏற்றுக்கொண்டு அதனைப் பின்பற்றத் தொடங்கி விட்டார்களா? என்று ஐயம் இப்போது தோன்றியிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெற்றதாக, அருட்தந்தை ஜீவத்த பீரிஸ் இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டதே, இந்த 30 ஆண்டு காலப் போர்" என்று அருட்தந்தை ஜீவத்த பீரிஸ் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும், இலங்கை கத்தோலிக்க திருச்சபையும், கடும் கண்டனம் தெரிவித்ததோடு ஜீவத்த பீரிஸ் கத்தோலிக்க திருச்சபையின் சித்தாந்தத்தை வெளிப்படுத்தவில்லை. 

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது - வைத்திய நிபுணர் தகவல்

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது - வைத்திய நிபுணர் தகவல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் 

அவர் தனது சொந்த கருத்தையே வெளிப்படுத்தியுள்ளார் என்று கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் சமூகத் தொடர்புகளுக்கான ஆயர் ஆணைக்குழுவின் தலைவரும், ஆயருமான ஜூட் நிஷாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், எந்தவொரு இனக்குழுவிற்கும் எதிரான போர் அல்ல என்றும் தலதாமாளிகை, அரந்தலாவவில் பிக்குகள், மத்திய வங்கி, கோட்டை பேருந்து நிலையம் மற்றும் தெஹிவளையில் தொடருந்து ஆகியவற்றின் மீது தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டியிருந்தது” என்றும் கொழும்பு கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப்பிரிவு சார்பாக வெளியிட்ட விளக்கத்திலிருந்து தமிழினப்படுகொலை என்ற கருத்தாக்கத்தை மீண்டும் சிங்கள கிறிஸ்தவ திருச்சபை நிராகரித்துள்ளது.

இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு | Division Of Tamil And Sinhala Christian Churches

இதேபோன்ற கருத்தை முன்னைய காலங்களில் கொழும்பு மறைமாவட்டத்தின் பேராயராகவும், கர்தினாலாகவும் (Cardinal) இருக்கின்ற மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை (Genocide) நடக்கவில்லை என்ற இலங்கை பௌத்த சிங்களப்பேரின அகங்காரவாத அரசினதும் ராணுவத்தினரதும் நிலைப்பாட்டையே பலமுறை அழுத்தமாக தெரிவித்துள்ளார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

2012ஆம் ஆண்டு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை உள்ளிட்ட தமிழ் கத்தோலிக்க மதகுருமார்கள் முள்ளிவாய்க்கால் போர்க்குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) சர்வதேச விசாரணை கோரியபோது, கர்தினால் மெல்கம் ரஞ்சித் அதனை கடுமையாக எதிர்த்தார்.  

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு

மேற்குலக நாடுகளின் இத்தகைய தலையீடு "இலங்கை மக்களின் அறிவாற்றலை அவமதிக்கும் செயல்" என்றும் அவர் குறிப்பிட்டார். அரசுக்கு ஆதரவான போக்கு, இறுதிப் போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதை "இனப்படுகொலை" என ஏற்பதை அவர் தவிர்த்து வந்துள்ளார்.

இதனாலேயே அவர் நீண்டகாலமாக ராஜபக்சர்க்களின் தீவிர ஆதரவாளராகவும், சிங்கள-பௌத்த பெரும்பான்மைவாத அரசுகளுக்கு முட்டுக்கொடுப்பவராகவும் தமிழ் அமைப்புகளால் விமர்சிக்கப்பட்டார்.

இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு | Division Of Tamil And Sinhala Christian Churches

அதேநேரம் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட கத்தோலிக்கர்களுக்காக சர்வதேச மற்றும் ஐநா விசாரணை வேண்டும் என தீவிரமாக வலியுறுத்தி வருகிறார். ஆனால், அதே ஐநா விசாரணையை தமிழ் மக்களின் முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு அவர் மறுப்பது பெரும் இரட்டை நிலைப்பாடு என மனித உரிமை ஆர்வலர்களால் அவர் மீது குற்றம் சுமத்துவது நியாயமானது தான்.

மீண்டும் தொடங்கும் ஈரானின் தாக்குதல்கள் : வான்வெளியை தற்காலிகமாக மூடிய குவைத்

மீண்டும் தொடங்கும் ஈரானின் தாக்குதல்கள் : வான்வெளியை தற்காலிகமாக மூடிய குவைத்

முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற புள்ளி விவரத்தை ஆதாரங்களுடன் முதன் முதலில் வெளியிட்டவர் காலம் சென்ற மன்னார் ஆண்டகை இராயப்பு ஜோசப்பு அடிகளார். அவர் மக்களின் இரத்தம் தோய்ந்த படுகொலை உண்மைகளை கண்ணீர் மல்க வெளியிட்டு இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடனாக தன்னை வெளிப்படுத்தினார்.

அவர் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மறக்கப்பட முடியாத மனிதராகவும் மக்களை ஆத்மாத்மா ரீதியாக நேசித்த உண்மை கிறிஸ்தவ குமாரனாகவும் மதங்களைக் கடந்து அனைத்து தமிழ் மக்களுக்கும் அவர் புனிதராக தோற்றமளிக்கிறார். 

ஈழத் தமிழர்களின் போராட்டம்

கடந்த 2000 ஆண்டுகளுக்கு மேலாக இயேசு கிறிஸ்து தனது அளவற்ற அன்பினால் மக்களை நேசித்து உலகின் பெரும்பான்மை மக்களின் இதயத்தில் ராஜாவாக சிம்மாசனம் இட்டும் இருக்கிறார். அவ்வாறே ஈழத் தமிழர்களை தனது அளவற்ற அன்பாலும் விசுவாசத்தாலும் நேசித்த இராயப்பு ஜோசப் ஆண்டகை ஈழத் தமிழர்களின் மனங்களில் சிம்மாசனம் இட்டிருக்கிறார்.

அது அவர் தமிழ் மக்களுக்கு செய்த ஊழியத்துக்கு கிடைத்த வெகுமதி. ஆனால் படுகொலைக்கு உள்ளாகி பெரும் துயரத்திலும், சொல்லனா துன்பங்களிலும் திளைத்திருக்கும் தமிழ் மக்கள் மீது அன்பையும், காருண்யத்தையும், உண்மையையும், இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தையும் இன, மத பேதங்களைக் கடந்து மனிதத்தை வெளிப்படுத்த வேண்டிய சிங்கள கிறிஸ்தவ திருச்சபையில் இருந்து மெல்கம் ரஞ்சித் மற்றும் ஜூட் நிஷாந்த சில்வா ஆண்டகை ஆகியோர் தெரிவிக்கும் கருத்துக்கள் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தபோது ஏற்பட்டதை விட பன்மடங்கு வலியை ஈழத் தமிழர்களுக்கு கொடுத்து இருக்கிறது. இவர்கள் ஈழத் தமிழர்களை சிலுவையில் அறைந்து விட்டார்கள் என்று சொல்ல வேண்டும்.

இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு | Division Of Tamil And Sinhala Christian Churches

இத்தகைய சிங்கள திருச்சபை மேற்கொள்ளும் கருத்துக்கள் எதிர்காலத்தில் இலங்கைத் தீவில் பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்த வழிவகை செய்யும். ஆண்டகைகளான மெல்கம் ரஞ்சித்தும், ஜூட் நிஷாந்த சில்வாவும் அண்மைக்காலமாக கூறுவரும் கருத்துக்கள் 60 இலட்சம் யூதர்களை படுகொலை செய்த அடால்ஃப் ஹிட்லரின் முதன்மை ஊடக மற்றும் பிரச்சாரப் பேச்சாளர் ஜோசப் கோயபெல்ஸ் (Joseph Goebbels) யூத படுகொலை நியாயப்படுத்திக் கூறிய கருத்துக்களுக்கும் இந்த சிங்கள அருட் தந்தையர்களுக்கும் இடையில் எந்த வித்தியாசத்தையும் காண முடியவில்லை நாஜி ஜெர்மனியின் பிரச்சார அமைச்சராகப் பணியாற்றி ஹிட்லரின் இனப்படுகொலை மற்றும் மனித பண்புகளற்ற கருத்துக்களையும், நாஜி கட்சியின் கொள்கைகளையும் அப்பாவி ஜெர்மனிய மக்களிடம் உண்மையான தத்துவம் போன்று கொண்டுசேர்ப்பதில் ஜோசப் கோயபெல்ஸ் முக்கியப் பங்காற்றினார். “பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அதுவே உண்மை போலத் தோன்றும்“ என்ற பிரச்சார யுக்தியைக் கையாண்டவர்களில் இவரே உலகிலேயே முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனை கைது செய்யும் போது மரணம்

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனை கைது செய்யும் போது மரணம்

இப்போது அதே பாணியில் இலங்கையின் தமிழினப் படுகொலையின் முக்கிய சூத்திர சாரிகளாகவும், இனப்படுகொலை, மற்றும் போர்க் குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என மிக கொடூரமான குற்றங்களை புரிந்தவர்களை நியாயப்படுத்துகின்ற, காப்பாற்றுகின்ற நோக்கத்தோடு “முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடக்கவில்லை“ என்ற பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையை பொய்யாக்கும் நவீன கோயபெல்ஸ் பணியையும், பாத்திரத்தையும் தென் இலங்கை சிங்களக் கிறிஸ்தவ திருச்சபையின் அருட்தந்தியர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்களோ என்ற ஐயம் தோன்றியிருக்கிறது.

இத்தகைய கருத்துக்கள் உடையவர்களை எவ்வாறு அருட்தந்தையர்களாக, தேவகுமாரனுக்காக ஊழியம் செய்ய வந்தவர்களாக எப்படி ஏற்றுக் கொள்வது? எவ்வாறு திருச்சபை அவர்களை தொடர்ந்து திருச்சபையில் அனுமதிப்பது? இது இலங்கை கிறிஸ்தவ திருச்சபைக்கு மாத்திரமல்ல திருச்சபையின் உயர் பீடமான வத்திக்காணையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

முள்ளிவாய்க்கால் படுகொலை

கத்தோலிக்கம் என்பது பைபிள், இயேசுகிறிஸ்துவின் சிலுவைப்பாடு என்ற இரண்டு சின்னங்களினால் அடையாளப்படுத்தப்படுகிறது.

பைபிள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாட்டினால் மேன்மை அடைந்திருக்கிறது. தமிழ் மக்களின் முள்ளிவாய்க்கால் மனித பேரவலத்தை, தமிழின படுகொலையை நிராகரிப்பவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாட்டை நிராகரிப்பவர்கள் ஆவார்கள். இவர்கள் கத்தோலிக்கத்தின் ஆத்மாவுக்கு எதிரான போக்கை கொண்டுள்ளார்கள் என்பதோடு கத்தோலிக்க இறை பணியின் ஆத்மாவை இவர்கள் படுகொலை செய்கிறார்கள் என்று துணிந்து சொல்லலாம்.

இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு | Division Of Tamil And Sinhala Christian Churches

இத்தகையவர்களை மதகுருக்களாக கத்தோலிக்க திருச்சபை வைத்திருப்பது என்பது திருச்சபை மீதான சந்தேகங்களையும் அதனுடைய திருப்பணியையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

தமிழ் கிறிஸ்தவ திருச்சபைக்கும் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைக்கும் இடையிலே செருகப்பட்ட ஆப்பாகவே முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்று சிங்கள பாதிரியார்கள் சொல்வது அமைகிறது.

இலங்கைத் தீவின் இன முரண்பாட்டின் உச்சத்தை கிறிஸ்தவ திருச்சபைகள் இரண்டாகப் பிளவு பட்டு இருப்பதே தெளிவாக கோடுட்டு காட்டுகிறது. 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US