அம்பாறையில் காட்டு யானை தாக்குதல் - மாணவன் வைத்தியசாலையில் அனுமதி
அம்பாறை - மத்திய முகாம் 03 பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவன் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று(02.10.2026) அதிகாலை 5 மணியளவில் நற்பிட்டிமுனை கிட்டங்கி பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
காட்டு யானை தாக்குதல்
நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு பகுதியில் இருந்து மத்திய முகாம் பிரதேசத்தை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போதே குறித்த மாணவன் காட்டுயானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த மாணவன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.