நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு: மீறினால் கடும் சட்ட நடவடிக்கை
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (03) மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கடைகளிலும் மது விற்பனையைத் தடுக்கும் உத்தரவை கலால் திணைக்களம் பிறப்பித்துள்ளது.
சட்டத்தை நடைமுறை
நாளை மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்கும் நாளில், சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப்படும், விநியோகிக்கப்படும் மற்றும் விற்கப்படும் இடங்கள், குறிப்பாக உரிமச் சட்டங்களை மீறும் இடங்களில் சோதனைகளை நடத்தி, குற்றவாளிகள் மீது சட்டத்தை நடைமுறைபடுத்துமாறு கலால் திணைக்கள நாயகம் எம். பி. என். ஏ. பெமரத்ன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் நாளைய தினம் சர்வதேச மது ஒழிப்பு தினம் ஒக்டோபர் 3 அனுஷ்டிக்கப்படவுள்ளது.