நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் முன்பே 22 பற்றி ஜனாதிபதி பேசுவது ஏன்..! சஜித் கேள்வி
நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்காத நிலையில், அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிப்பது எவ்வாறு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(09.09.2026) நடைபெற்ற அமர்வில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தீர்ப்பை இன்னும் வழங்காத சூழலில்
மேலும் தெரிவிக்கையில், “20 ஆவது திருத்தத்தின்போது, அதற்கு நாடாளுமன்ற அனுமதி மாத்திரம் போதாது என்றும் சர்வஜன வாக்கெடுப்பு தேவை என்றும் அன்று அநுர குமார திசாநாயக்க கூறினார்.

ஆனால், அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில், சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமலேயே அதனை நிறைவேற்றுவதாகக் குறிப்பிடுகின்றார்.
கண்ணியத்துக்குரிய நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்னும் வழங்காத சூழலில், ஜனாதிபதி முன்கூட்டியே தீர்ப்பளிப்பது போன்ற பாணியில் கருத்துத் தெரிவிப்பது பாரிய பிரச்சினைக்குரிய விடயமாகும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை
பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் என்பது அரசுகளின் நிறுவனமாக இல்லாவிட்டாலும், பொதுநலவாய அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரபூர்வ அமைப்பாகும்.

ஆனால், அரசு இதனைப் பணம் செலுத்திச் செயற்படும் அமைப்பு எனக் கூறித் தரம் தாழ்த்திப் பேசியுள்ளது. 22 ஆவது திருத்தம் ஜனநாயகத்துக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து இந்தச் சங்கம் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்துள்ளதுடன் நீதி அமைச்சரும் அதிகாரிகளும் அதன் தலைவரைச் சந்திப்பதைத் தவிர்த்துள்ளனர்.
எனவே, நீதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு வந்து இந்தச் சங்கத்திடம் மன்னிப்புக் கோர வேண்டும். ஊடகத்துறையை அடக்கும் நோக்கத்துடன் இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை உருவாக்க அரசு முற்படுகின்றது.
இது ஊடகச் சுதந்திரத்துக்கு விடப்படும் மரண அடியாகும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி ஊடகங்களை அடக்குவதற்கு எதிர்க்கட்சி இடமளிக்காது“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25