நல்லாட்சியில் அரச பங்காளியாக மனோகணேசன் அணி சாதித்தவை!

Facebook Mano Ganeshan Sri Lanka Politician Sri Lankan Peoples Tamil National Alliance
By Rakesh Jun 03, 2023 12:31 PM GMT
Report

2015ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி முதன் முறையாக ஆட்சியில் பங்காளியாகச் செயற்பட்ட நான்கு (2015 - 2019) வருடங்களில் ஏற்படுத்திய சாதனைகளும், அடித்தளங்களும், எமது தொடர்சியான அரசியல் பயணமும் என்ற தலைப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நுவரெலிய மாவட்டத்தில் மேலதிக புதிய ஆறு பிரதேச சபைகள் அமைக்கும் தீர்மானம், அரசுக்குள் நடைபெற்ற பெரும் வாத விவாதங்களுக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, புதிய பிரதேச சபைகள் அமைக்கப்பட்டு, மலையகத் தமிழ் மக்களுக்கான தேசிய அரசியல் அதிகாரம் பகிர்வுப் பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய அரசியல் அதிகாரம் பகிர்வுக்குச் சமமாக, தேசிய நிர்வாக அதிகார பரவலாக்கல் கொள்கையின்படி, புதிய பிரதேச செயலகங்களும், கிராம சேவையாளர் பிரிவுகளும் அமைக்கும் தீர்மானம் கொள்கை ரீதியாக ஏற்கப்பட்டு, பிரதேச செயலகங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

நல்லாட்சியில் அரச பங்காளியாக மனோகணேசன் அணி சாதித்தவை! | What Have Manoganesan S Team Achieved

வர்த்தமானி அறிவித்தல்

மேலும், தோட்டங்களில் ஏழு பேர்ச் சொந்த காணி வழங்கலுக்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 நீண்ட காலமாக நின்று போயிருந்த, இந்திய அரசின் பெருந்தோட்ட வீடமைப்பு உதவி திட்டம், இலங்கை - இந்திய அரசுகளின் ஒப்புதலுடன், நடைமுறைக்கு வந்தது.

தோட்டத் தொழிலாளருக்கான சொந்த உறுதி பத்திரம் கொண்ட தனி வீடுகள் கட்டப்படும் திட்டம் மலைநாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.

அவ்விதம், கட்டப்படும் குடியிருப்புகள் மலையகத்தில் புதிய கிராமங்களாக அறிவிக்கப்பட்டு, மலைநாட்டில் தமிழ் கிராமங்கள் என்ற புதிய காற்று வீச தொடங்கியது.

அமைச்சரவைப் பத்திரம்

மலையக மக்களால் வாக்களித்துத் தெரிவு செய்யப்படும் பிரதேச சபைகளுக்கு  தம்மைத் தெரிவு செய்யும் தோட்ட புறங்களுக்கு அபிவிருத்தி நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என்ற பிரதேச சபை அதிகார எல்லை சட்டத்தின் 33 ஆம் இலக்க விதி, திருத்தப்பட்டு, பிரதேச சபைகளின் அதிகார வரம்பு, தோட்டபுறங்களுக்கு அதிகாரபூர்வமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

நல்லாட்சியில் அரச பங்காளியாக மனோகணேசன் அணி சாதித்தவை! | What Have Manoganesan S Team Achieved

மலையக அபிவிருத்திக்கான தனியான அதிகார சபை அமைக்கும் அமைச்சரவைப் பத்திரம், அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டு, இன்று சட்டமாகி, பெருந்தோட்ட அபிவிருத்தி அதிகார சபை அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 300 தோட்டப் புற பாடசாலைகளுக்கு, அவ்வவ் தோட்டங்களில் அவசியப்படும் போது மேலதிக காணிகளைச் சுவீகரிக்கும் அதிகாரத்தைக் கல்வித்துறைக்கு வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தது.

மலையக விவசாயின் திட்டம் பற்றிய கொள்கை

மலையக மக்களுக்கு, தேசிய அரசமைப்புப் பணியில், ஏனைய இனங்களுக்கு வழங்கப்படும் அதே சம அந்தஸ்தும், காத்திரமான சம பங்கும் வழங்கப்பட்டன.

மலையக மக்கள் தனி ஒரு தேசிய இனம் என்ற அரசியல் கருத்து இன்று தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

நல்லாட்சியில் அரச பங்காளியாக மனோகணேசன் அணி சாதித்தவை! | What Have Manoganesan S Team Achieved

பெருந்தோட்ட மறுசீரமைப்பு இலக்கில், தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தைக் கூட்டும் வெளிப்பயிர்ச்செய்கை வருமானத் திட்டம் சீரமைக்கப்பட்டு, தோட்டத் தொழிலாளர்களை, சிறு நில உடைமையாளர்களாக (மலையக விவசாயி) ஆக்கும் திட்டம் பற்றிய கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, அது, தமிழ் முற்போக்குக் கூட்டணி பங்கு கொண்டு ஆதரித்த, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட்டது. இது இப்போது சாதகமான எதிர்காலப் பயன்பாட்டுக்கான ஆவணம்.

மலையகப் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில், மலையக சான்றோர் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டதுடன், அக்குழு கூடி ஆராய்ந்து, பல்கலைக்கழகம் தொடர்பான சாத்தியப்பாட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது. - என்றுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US