அவுஸ்திரேலியாவை தோற்கடித்த மேற்கிந்திய தீவுகள் அணி
2025 ஆம் ஆண்டின், சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 20க்கு 20 தொடரின் 2வது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி, அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்துள்ளது.
இந்தியாவில் நேற்று (24) நடைபெற்ற இந்தப்போட்;டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி, தமது 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள்
இதில் சேன் வோட்சன் 107 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சில் நேர்ஸ் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகளின் மாஸ்டர்ஸ் அணி, 19.2 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து 220 ஓட்டங்களை பெற்ற போட்டியில் வெற்றியீட்டியது.
இதில் சிமன்ஸ் ஆட்டமிழக்காமல் 94 ஓட்டங்களை பெற்றிருந்தார். ஸ்மித் 51 ஓட்டங்களை பெற்றார்.
முன்னதாக இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கும் இடையிலான முதல் போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி, வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
