கோவிட் அபாய நிலைக்கு மத்தியில் வெசாக் ஏற்பாடுகள் நயினாதீவில் தீவிரம்
தேசிய வெசாக் கொண்டாட்டம் இம்முறை நயினாதீவில் இடம்பெறவுள்ளது. அதற்கான ஏற்பாட்டுக் கூட்டம் நயினாதீவு ரஜமகா விகாரையில் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மே மாதம் 31ஆம் திகதி வரையில் நிகழ்வுகள், கொண்டாட்டங்களுக்கு மட்டுப்பாடுகள் விதித்து சுகாதார அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.
இதேவேளை ஆலயத் தேர்த் திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டதாகத் தெரிவித்து ஆலய நிர்வாகிகள் கைதாகிப் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு சூழலில் எதிர்வரும் மே மாதம் இறுதி வாரத்தில் தேசிய வெசாக்
கொண்டாட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர்
திருமதி சாள்ஸ் மற்றும் மாவட்டச் செயலர் க.மகேசன் ஆகியோரின் பங்கேற்புடன்
ரஜமகா விகாரையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றுள்ளது.
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri