சற்றுமுன்னர் யோஷித ராஜபக்ச கைது
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இன்று (17) இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை ஒன்றில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
யோஷித ராஜபக்ச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையாகியுள்ளார்.
விசாரணை ஒன்றில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கமைய, அவர் இன்று காலை (17) முன்னிலையாகியுள்ளார்.
சட்டரீதியான காரணங்கள்
நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டரீதியான காரணங்களினால் அவரால் முன்னிலையாக முடியாது என ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்த நிலையிலேயே இன்று முன்னிலையாகியுள்ளார்.