யோஷிதவின் கைது தொடர்பில் இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு
இலங்கை கடற்படையின் முன்னாள் அதிகாரியான யோஷித ராஜபக்சவின் கைதுக்கான காரணத்தை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) அறிவித்துள்ளது.
அதன்படி அவரது ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி செயல்முறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பானதாக இவ்வழக்கு அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி பூர்த்தியின்றி நியமனம்
இது தொடர்பில் இன்றைய தினம் (17.06.2026) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும், கடற்படை மாணவராக இருந்த யோஷித ராஜபக்ச, நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யாமலேயே 2006ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிர்வாகப் பிரிவில் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டதாகக் கூறப்படுவதாக CIABOC தெரிவித்துள்ளது.

மேலும், நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி நடைமுறைகளுக்கு வெளியே, அரசாங்க நிதியைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் ராயல் கடற்படைக் கல்லூரியில் ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள அவருக்குப் பின்னர் வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தனது புலனாய்வு அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக CIABOC கூறியுள்ளது.
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam