2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி விவகாரம்! முக்கிய 91 அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு
2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமான சம்பவம் தொடர்பில் முக்கிய 91 அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
2.5 மில்லியன் டொலர் மோசடி தொடர்பாக பல தொழில்நுட்ப சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சம்பவம் நடந்த உடனேயே, நிதி அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து வெளிநாடுகளிடமிருந்து தகவல் கோரல்
இதற்கமைய, வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், பொதுக்கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் 91 அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வங்கி கணக்கு தகவல்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களைப் பெறுவதற்காக ஐந்து வெளிநாடுகளிடமிருந்து தகவல் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சந்தேகநபர்களை அடையாளம் காண சர்வதேச பொலிஸ் மற்றும் தொடர்புடைய நாடுகளுடன் கூட்டாக பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.