கைதினை தடுக்க அவசரமாக மனுத்தாக்கல் செய்த கோட்டாபய! சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட விடயம்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையை தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு தொடர்பாக, எதிர்மனுதாரர்களிடமிருந்து தனக்கு இன்னும் எந்த அறிவுறுத்தல்களும் வரவில்லை என்று சட்டமா அதிபர் இன்று (17) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்ததுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைக் கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கோட்டாபயவின் கைதுச் செய்தி..! சிஐடியின் சாட்சியங்களின் ஊடாகவே தீர்மானம் - அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட விடயம்
இந்த மனு இன்று ( 17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் தரப்பில் இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இருப்பினும், பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் இன்று காலை தனக்கு கிடைத்ததாகவும், பிரதிவாதிகளிடமிருந்து இதுவரை எந்த அறிவுறுத்தல்களும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மனுதாரர் கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ரொமேஷ் டி சில்வா, தனது கட்சிக்காரரின் கைது நடவடிக்கையைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை கோருவதாக தெரிவித்துள்ளார்.
விசாரணை ஒத்திவைப்பு
எதிர்மனுதாரர்களிடமிருந்து அறிவுறுத்தல்களை பெறாமல், மனுதாரர் கைது செய்யப்படமாட்டார் என்று நீதிமன்றத்தால் உறுதியளிக்க முடியாது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மனு தொடர்பான நீதிமன்றம் விசாரணையை இன்று பிற்பகல் வரை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.