கொக்கிளாய் கடலில் தொழிலிற்கு சென்ற இளைஞன் கடலில் மாயம் - தேடுதல் பணி தீவிரம்
முல்லைத்தீவு - கொக்கிளாய் கடலிற்கு தொழிலிற்கு சென்ற இளைஞன் கடலில் மாயமாகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கொக்கிளாய் கடலிற்கு நேற்று (25.07.2025) அதிகாலை 4.30 மணியளவில் கடற்தொழிலுக்கு 5 பேர் சென்ற நிலையில் ஒருவர் மாயமாகியுள்ளார்.
தேடும் நடவடிக்கை
இந்த நிலையில் குறித்த நபரை தேடும் நடவடிக்கையில் கிராம மக்கள் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் இருந்து தொழிலினை மேற்கொண்டுவரும் பொன்னம்பெருமகே ஜெகான் நதிஅருண் எனும் 23 வயது இளைஞனே மாயமாகியுள்ளார்.
முறைப்பாடு பதிவு
குறித்த இளைஞன் தொடர்பாக கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடு பதிவு செய்தும் இதுவரை அவ் இடத்திற்கு பொலிஸார் வருகை தரவில்லை என காணாமல் போன இளைஞனின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.









