ஆளும் தரப்பு எம்.பி விரைவில் கைது..! வெளியான பரபரப்பு தகவல்
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு ஹலவத்த உயர் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜெகத் சமந்தவின் வீட்டிற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டிலேயே நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்றையதினம்(24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நாடாளுமன்ற அமர்வு
இந்நிலையில், நேற்றையதினம் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றதால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என அஜித் கிஹான் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்காலத்தில் வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசாங்கத்திற்கு அவப்பெயரை உருவாக்கும் நோக்கில் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam