வீரவங்சவுக்கும் கம்மன்பிலவுக்கும் ஆட்சி அதிகாரம் என்ன என்பது தெரியாது
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரம் என்ன என்பதை அறியாமல் இருந்துள்ளனர் எனவும் அவர்களை வேறு நபர்கள் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிக்கவரெட்டிய தொகுதியின் பெண்கள் பிரிவின் கூட்டத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எமது நண்பர்கள் சிலர் அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரம் என்ன என்பதை அறியாமல் இருந்தனர் என்பது கவலைக்குரிய விடயம். அவர்கள் வேறு சில விடயங்களில் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை சிலர் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதன் காரணமாக எரிசக்தி அமைச்சர் வெளியில் வந்து நான்கு நாட்களுக்கு போதுமான எரிபொருளே கைவசம் இருப்பதாக கூறினார்.
டொலர்களை வழங்க மறுக்கின்றனர். திராட்சை பழம் மற்றும் அப்பிள் பழங்களை இறக்குமதி செய்யவே டொலர்களை வழங்கின்றனர் என்றும் கூறினார். டொலர்களை வழங்கினால், எரிபொருளை இறக்குமதி செய்ய முடியும் என்றும் சொன்னார்.
இவற்றை அரசாங்கத்திற்குள் கூறி இருக்க வேண்டும். இப்படியான குழப்பங்களை எதிர்க்கட்சிகளே மேற்கொள்ளும். முன்னாள் அமைச்சர்கள் வீரவங்ச மற்றும் கம்மன்பில ஆகியோர் தற்போது அரசாங்கத்தை சாடுகின்றனர்.
பல கதைகளை கூறுகின்றனர். இவை எமக்கு பிரச்சினையில்லை. நாங்கள் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம். பிரச்சினைகளை தீர்த்து நாட்டை கட்டியெழுப்புவோம் என்பது உறுதியானது எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 28 நிமிடங்கள் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri