வீடு திரும்பிய ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி - தடவியல் பொலிஸாருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெறுமதியான நகைககள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(15.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் பட்டப்பகலில் புகுந்த திருடர், வீட்டுக் கதவினை சூட்சுமாக உடைத்து உள் நுழைந்து அங்கிருந்த அலுமாரிகளை உடைத்துள்ளனர்.
வீடு திரும்பிய ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி
அதன் பின்னர், அதற்குள் இருந்த பெறுமதியான சங்கிலி, தோடுகள் உள்ளிட்ட நகைகள் மற்றும் ஒரு தொகைப் பணம் என்பவற்றையும் திருடிச் சென்றுள்ளனர்.

காலை வீட்டில் இருந்து பாடசாலைக்கு சென்ற ஆசிரியர் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு திருடப்பட்டு இருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், தடவியல் பொலிஸாரின் உதவியை நாடுவதற்கான நடவடிக்கையையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


