ஜனாதிபதியாகும் திட்டத்தில் விமல்!
நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பதவிக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் விமல் வீரவங்ச, அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாகி வருவதாக ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
தேனீர் கோப்பையில் முதலைகளை காட்டியதால், வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சு பதவிகள் பறிபோயின. அரசாங்கத்தை விமர்சித்து, வீரவங்ச மற்றும் கம்மன்பில உள்ளிட்டோர் சுமத்தும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை.
ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே இவர்களை பதவிகளில் இருந்து நீக்கினார். இந்த முன்னாள் அமைச்சர்கள் ஜனாதிபதி எதிராக முன்வைக்கும் விமர்சனங்கள், சுமத்தும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை எனவும் சனத் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 29 நிமிடங்கள் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri