வவுனியாவில் களைகட்டிய பொங்கல் வியாபாரம்
தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.
செவ்வாய்க்கிழமை உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடவுள்ளனர்.
பொருட்கள் கொள்வனவு
வவுனியா நகரப்பகுதியில் அதிக சன நெரிசல் காணப்படுவதுடன் பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது.
தைப்பொங்கல் திருநாள் செவ்வாய்க்கிழமை (14.01.2025) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகை களைகட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
அத்துடன், கடந்த வருடத்தினை விட இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |