காசா போர் நிறுத்த ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இஸ்ரேல் விளக்கம்
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பைடனுடன் நெதன்யாகு விவாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பணயக்கைதிகளை விடுவிப்பதை முன்னெடுப்பதற்காக தோஹா பேச்சுவார்த்தை குழுவிற்கு அவர் வழங்கிய ஆணை குறித்து ஜோ பைடனுக்கு, நெதன்யாகு விளக்கமளித்ததாகவும் கூறப்படுகிறது.
உடனடி போர் நிறுத்தம்
காசாவில் உடனடி போர் நிறுத்தம், பணயக்கைதிகளை திருப்பி அனுப்புதல் மற்றும் உறைவிடத்திற்கு மனிதாபிமான உதவிகளை அதிகரித்தல் ஆகியவற்றிற்கு பைடன் மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், முன்னாள் சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் ஆட்சி சரிந்தது மற்றும் பிராந்தியத்தில் ஈரானின் பலவீனமான நிலை குறித்தும் பைடன் நெதன்யாகுவிடம் பேசினார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஒக்டோபர் 2024க்குப் பிறகு இருவருக்கும் இடையே இடம்பெற்ற முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |