கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்களில் இருந்து இறங்கும் பயணிகளை குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவுக்கு அழைத்து வரும் பேருந்து சேவை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக விமான பயணிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் இலங்கையில் பெறும் முதல் சேவை இந்தப் பேருந்து சேவையாகும்.
ஒரு விடயத்தை பற்றி முதலில் ஏற்படும் எண்ணம், அது கடைசியாகவே ஏற்படும் எண்ணமாகவே இருக்கும் என்றும், முதல் சேவையிலேயே வெளிநாட்டு பயணிகளிடம் விரும்பத்தகாத எண்ணத்தை ஏற்படுத்துவது முழு நாட்டின் பிம்பத்தையும் எதிர்மறையாக பாதிக்கும் என்றும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விமான பயணிகள்
பேருந்துகளின் உட்புறம் டிப்போவிலிருந்து கொண்டு வரப்பட்ட பேருந்துகளை போலவே இருப்பதாகவும், 138 மஹரகம - புறக்கோட்டை பேருந்தில் உள்ள அதே நெரிசலை போன்றே பயணிகள் அவற்றில் ஏற்றப்படுவதாகவும் பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

12 மணி நேர நீண்ட விமானப் பயணத்திற்குப் பிறகு ஒரு நாட்டில் தரையிறங்கும் போது விமான பயணிகள் இந்த நடைமுறையால் மிகவும் சங்கடப்படுகிறார்கள் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam